×

10 பிடிஓக்கள் பணியிடமாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், டிச.20: வேலூர் மாவட்டத்தில் 10 பிடிஓக்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றிய திருமலை, அதே அலுவலகத்தில் பிடிஓவாகவும், அங்கு பணியாற்றிய கல்பனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணியாற்றிய அமுதவல்லி, குடியாத்தம் வளர்ச்சி திட்ட பிடிஓவாகவும், அங்கு பணியாற்றிய சரவணன் அதே அலுவலகத்தில் கிராம ஊராட்சி பிடிஓவாகவும், அங்கு பணியாற்றிய பிடிஓ வினோத்குமார், பேர்ணாம்பட்டு பிடிஓவாகவும், அங்கு பணியாற்றிய சத்தியமூர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றிய சசிகலா, வேலூர் பிடிஓவாகவும், அங்கு பணியாற்றிய கோபி, தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பிடிஓவாகவாக (100 நாள் திட்டம்), பணியாற்றிய சுதாகரன், அதே அலுவலகத்தில் (நிர்வாக பிடிஓவாகவும்), அங்கு பணியாற்றிய கார்த்திகேயன் அதே அலுவலத்தில் 100 நாள் திட்ட பிடிஓவாகவும் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post 10 பிடிஓக்கள் பணியிடமாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Subbulakshmi ,Thirumalai ,Panchayats Assistant Director's Office ,Kalpana ,District Rural Development Agency Project Director's Office… ,Dinakaran ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...