- ஆர்.கே.பேட்டை அங்கன்வாடி மையம்
- சமத்துவபுரம், புஷ்லாண்ட்
- ஆர்.கே.பேட்டை
- அங்கன்வாடி மையம்
- சாமத்துவாபுரம்
- ஆர்.கே.பேட்டை ஒன்றியம்
- தின மலர்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த சமத்துவபுரத்தில் செடி, கொடிகளால் புதர்மண்டி காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சமத்துவபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 மாணவர்களும், குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த, அங்கன்வாடி மையத்தை சுற்றி செடி, கொடிகள் மற்றும் மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
இதனால், அடிக்கடி விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து விடுகின்றன. மேலும், குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிப்பறை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளது. புதர்மண்டி காணப்படும் செடிகளை அகற்றவும், கழிப்பறை சீரமைக்க கோரியும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கேட்டு பலமுறை ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, முட்புதரில் இருக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என சமத்துவபுரம் பகுதி மக்கள் ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஆர்.கே.பேட்டை சமத்துவபுரத்தில் புதர்மண்டிய அங்கன்வாடி மையம்: ஆபத்தான நிலையில் குழந்தைகள்; சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.