×

சாக்கடை மூடி உடைந்து சாலையில் கழிவுநீர் தேக்கம்

மாதவரம்: ஓட்டேரி 99வது வார்டுக்கு உட்பட்ட பிரிக்கிளின் ரோடு திடீர் நகர் நுழைவு பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது. அதன் அருகே சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். பரபரப்பாக காணப்படும் இந்த சாலை பகுதியில் ஓட்டேரி சுடுகாடு செல்லும் வழியில் நடைபாதைகள் உடைந்துள்ளதாலும் பாதாள சாக்கடை அருகே சிறிய பள்ளம் உள்ளதாலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி பாதாள சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட பாதாள சாக்கடை மூடியை சரி செய்து இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாக்கடை மூடி உடைந்து சாலையில் கழிவுநீர் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Bricklin Road ,Ward 99 ,Otteri ,Dinakaran ,
× RELATED ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் பாதாள...