×

ஆர்.கே.பேட்டையில் மூதாட்டியிடம் திருடிய இளைஞர் கைது: 10 பவுன் சங்கிலி மீட்பு

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் மூதாட்டியிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை ஆர்.கே.பேட்டை போலீசார் நேற்று கைது செய்து தங்கச் செயினை மீட்டனர். ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தேசம்மாள்(75). இவர் கடந்த 14ம் தேதி மதியம் 12.30 மணிக்கு வீட்டில் கட்டிலில் படுத்தபடி டிவி பார்த்துகொண்டிந்தார். அப்போது வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் குறித்து மூதாட்டி தேசம்மாள் ஆர்.கே.பேட்டை போலீசில் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கிருஷ்ணாகுப்பம் அருகே காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் அவ்வழியாக வந்த இளைஞரை மடக்கி விசாரனை செய்ததில், நகையை வங்கியில் அடகு வைத்திருந்தற்கான நோட்டீஸை வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் விசாரனையில் கிருஷ்ணாகுப்பம், பஜனை கோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் அஜித்குமார்(25) என்றும் ராமாபுரம் பகுதியில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆர்.கே.பேட்டை போலீசார் செயினை மீட்டு, அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆர்.கே.பேட்டையில் மூதாட்டியிடம் திருடிய இளைஞர் கைது: 10 பவுன் சங்கிலி மீட்பு appeared first on Dinakaran.

Tags : R.K.Petta ,RK.Petta ,Ramapuram ,Tiruvallur district ,R.K.Petta Panchayat Union… ,RK ,
× RELATED ஆர்.கே.பேட்டை சமத்துவபுரத்தில்...