அம்பத்தூர், டிச.21: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பூக்கள் வரத்து குறைந்ததால் விலை 4 மடங்கு உயர்ந்தது. இந்நிலையில், வரத்து அதிகரிப்பால், பூக்களின் விலை நேற்று சற்று குறைந்தது.
அதன்படி, ஒரு கிலோ மல்லி ₹2500ல் இருந்து ₹2,300க்கும், ஐஸ் மல்லி ₹2,300ல் இருந்து ₹1,800க்கும், முல்லை ₹750க்கும், ஜாதி ₹600க்கும், கனகாம்பரம் ₹800க்கும், அரளி ₹400க்கும், சாமந்தி ₹100க்கும், சம்பங்கி ₹230ல் இருந்து ₹100க்கும், சாக்லேட் ரோஸ் ₹280ல் இருந்து ₹180க்கும், பன்னீர் ரோஸ் ₹200ல் இருந்து ₹120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘ஆந்திரா, கர்நாடகா, ஒசூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இங்கும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஏராளமான வியாபாரிகள் பூக்கள் வாங்க வந்தனர். அதனால் நேற்று மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரத்து குறைந்தது. இதனால் பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது,’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.