×

பழநியில் நால்ரோடு வளைவில் பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி

பழநி, டிச. 20: பழநி நகரின் வடக்கு பகுதியில் ரெணகாளியம்மன் கோயில் அருகே நால்ரோடு சந்திப்பு உள்ளது. தெற்கு பகுதியில் நகர் பகுதியையும், மேற்கு பகுதியில் உடுமலை, கோவை சாலையையும், வடக்கு பகுதியில் தாராபுரம் சாலையையும், கிழக்கு பகுதியில் கான்வென்ட் சாலையையும் இணைக்கும் விதத்தில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் இச்சாலை போக்குவரத்து நிறைந்ததாகவே காணப்படும். இச்சாலையின் அருகிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது.

எனவே, இந்நிறுத்தங்களை சற்று தள்ளி அமைப்பதன் மூலம் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தவிர, இச்சாலையை விழா காலங்களில் செய்வது போல் நிரந்தரமாக ஒரு வழிப்பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தற்போது தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால் பழநி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இதனால் ரெணகாளியம்மன் கோயில் பகுதி, அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படும். எனவே, பழநியில் அதிகளவில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

The post பழநியில் நால்ரோடு வளைவில் பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Palani ,Renakaliamman Temple ,Udumalai ,Coimbatore Road ,Tarapuram Road ,Convent Road… ,Dinakaran ,
× RELATED பனிப்பொழிவு அதிகரிப்பால்...