×

எஸ்பியிடம் மனு வழங்கிய மல்லி பஞ்சாயத்து தலைவர்

வில்லிபுத்தூர், டிச.19: விருதுநகர் மாவட்ட எஸ்பியிடம் மல்லி பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை மனு வழங்கினார். வில்லிபுத்தூர் அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விருதுநகர் எஸ்பி கண்ணன் மல்லி ஊராட்சியில் ஆய்வு செய்ய வந்தார். ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெற்ற எஸ்பி, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உங்கள் கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார். இதில் எஸ்பி கண்ணனிடம் மல்லி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் கோரிக்கை மனுவினை வழங்கினார்.

The post எஸ்பியிடம் மனு வழங்கிய மல்லி பஞ்சாயத்து தலைவர் appeared first on Dinakaran.

Tags : Malli Panchayat ,President ,SP ,Virudhunagar District ,Kannan ,Villiputhur ,Malli Panchayat President ,Dinakaran ,
× RELATED கமுதி அருகே சின்ன உடப்பங்குளத்தில்...