×

பேட்டரி திருடியவர் கைது

தக்கலை, டிச.19: தக்கலை அருகே மணலிகரையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தக்கலை அருகே உள்ள பரைக்கோட்டில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று காலை ஒர்க் ஷாப்பை திறந்து வைத்துவிட்டு முளகுமூடு பகுதிக்கு உதிரி பாகங்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த ஆசாமி அங்கிருந்த டூவீலருக்கான பேட்டரி களை திருட்டுத்தனமாக எடுத்து செல்ல முற்பட்டார்.

இதனை பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து தக்கலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர் அழகிய பாண்டியபுரம் காட்டுப்புதூரை சேர்ந்த மகேஷ் (36) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

The post பேட்டரி திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thakkalai ,Satish Kumar ,Manalikarai ,Paraikot ,Mulakumoodu ,Dinakaran ,
× RELATED விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்