சென்னை: வழக்கு களுக்கு பயந்து தன்மானம் விட்டு பாஜவிடம் சரண டைந்தவர் டிடிவி என ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் வரும் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காவல்துறையின் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஜெயக்குமார் மனு ஒன்று அளித்தார். அதன்பிறகு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவுடன் அதிமுக நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை, 2026 தேர்தலில் கூட கூட்டணி இல்லை என்பதை பலமுறை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
டிடிவி தினகரனை பொருத்தவரை, தன்மானத்தை விட்டு எந்த அளவிற்கு பல வழக்குகள் போடப்பட்டு அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற வகையில் பாஜவிடம் சரணடைந்துள்ளார். அதிமுகவை பொருத்தவரை தன்மானத்தோடு இயங்கக்கூடிய ஒரு இயக்கம். யார் காலிலும் விழவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
இந்தியா முழுவதும் போற்றக்கூடிய அம்பேத்கரை தலைவரை போற்றப்பட வேண்டுமே தவிர, அவர் புகழை சிறுமைப்படுத்தக்கூடிய செயலை செய்யக் கூடாது. அமித்ஷாவின் பேச்சு என்பது பலதரப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், பாஜவிற்குத்தான் பின்விளைவு கடுமையாக ஏற்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கூட்டுக் குழு கூடும்போது எங்களுடைய முடிவை நாங்கள் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post வழக்குகளுக்கு பயந்து தன்மானம் விட்டு பாஜவிடம் சரணடைந்த டிடிவி.தினகரன்: ஜெயக்குமார் கடும் தாக்கு appeared first on Dinakaran.