- பொள்ளாச்சி
- கோவா
- திருப்பூர்
- பழனி
- உடுமலை
- திண்டுக்கல்
- மதுரை
- கரூர்
- ஈரோடு
- Valpara
- இயக்கப்படுகிறது
- தின மலர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் மத்திய பஸ்நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கும் கோவை,திருப்பூர், பழனி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு மற்றும் வால்பாறை உள்ளிட்ட வெகுதூர இடங்களுக்கும் அரசு பஸ் மட்டுமின்றி, தனியார் பஸ்களும் இயக்கப்படுகிறது. இதில் பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்திலிருந்து சமத்தூர்,அங்கலக்குறிச்சி, ஆழியார்,அட்டக்கட்டி வழியாக வால்பாறைக்கு செல்லும் அரசு பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை பொழிவு அவ்வப்போது இருப்பதுடன்,தற்போது பனிப்பொழிவும் அதிகரித்து இருப்பதால், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதை பகல் நேரத்திலேயே பனிமூட்டம் சூழ்ந்த இடமாக உள்ளது. எனவே, மலைப்பாதையில் செல்லும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்களும்,வேகமாக செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்: நகரில் உள்ள இரு பஸ் நிலையங்களில் இருந்தும் உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.
இதில், மலை பிரதேச இடமான வால்பாறைக்கு தினமும் குறிப்பிட் நேரத்திற்கு ஒருமுறை அரசு பஸ் போக்குவரத்து உள்ளது.ஆனால் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதால்,மலைப்பாதை வழியாக செல்லும் பஸ் டிரைவர்கள்,ஒளி விளக்கை ஒளிர செய்து செல்வதுடன்,வேகத்தை குறைத்து கவனமாக செல்ல வேண்டும்.அடர்ந்த பனிமூட்டம் காரணமாக எதிர் திசையில் வரும் வாகனங்கள் சில நேரங்களில் தெரியாமல் இருக்கும் என்பதால், மலைப்பாதையில் வாகனத்தை இயக்கி செல்லும் டிரைவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்றார்.
The post பனிப்பொழிவு அதிகரிப்பால் மலைப்பாதையில் விபத்தை தவிர்க்க பஸ்சை கவனமாக இயக்க வேண்டும்: போக்குவரத்து அதிகாரிகள் அறிவுரை appeared first on Dinakaran.