சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பது குறித்த கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது என்று டிடிவி தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். ஒன்றிய அரசு அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதிமுக அழியாமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாகும். தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவுக்குள் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அவரது செயல்பாட்டால் 2026க்கு பிறகு அதிமுக இருக்குமா என்கிற கேள்வி வருகிறது. 2026ல் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி கூறுவது மூடநம்பிக்கையுடன் பேசுவது போலவே தெரிகிறது. அவரது செயல்பாடு, பிற கட்சிகளுக்குத்தான் பலனாக அமையும். அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி இருப்பது தற்காலிகம்தான். மக்கள் மன்றத்தில் தோல்விகளைத்தான் சந்திக்கிறார்.
அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமென்றால், பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். என்று கூறியிருந்தார். இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது; பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பது குறித்த கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது. அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை எடப்பாடி கூறியுள்ளார்; அதன்படியே செயல்படுவோம். தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளவே சிலர் அதிமுக கூட்டணிக்கு வரும் என்று பேசுவதாக டிடிவி தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
The post பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்றகற்பனைக்கு பதில் சொல்ல முடியாது: டிடிவி தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி appeared first on Dinakaran.