×

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உறுப்பினர் சேர்க்கை

 

ஒரத்தநாடு, டிச.18: கவின்மிகு தஞ்சை சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் தஞ்சையில் நடைபெற்றது. கவின்மிகு தஞ்சை இயக்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விழா இயக்கத்தின் செயலாளர் டாக்டர் ராதிகா மைக்கேல் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தேசிய பசுமை படை மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் முனைவர் ராம் மனோகர் மற்றும் தஞ்சை கவிஞர் ராமதாஸ் மற்றும் திருமங்கலக்கோட்டை மேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் குருசாமி மற்றும் காட்டு குறிச்சி தென்னமநாடு கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் மற்றும் திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி கீழையூர் உதவி தலைமை ஆசிரியர் திருக்குமரன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு பள்ளி பசுமை படை இயக்குனரும் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் இணைச்செயலர் ஆறுமுகம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

The post சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Kavinmigu ,Thanjavur ,Kavinmigu Thanjavur movement ,Dr. ,Radhika Michael ,National Green… ,Dinakaran ,
× RELATED ஒரத்தநாடு பைபாசில் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு