- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
- புதுக்கோட்டை
- விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாநாட்டு அரங்கம்
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்...
- தின மலர்
புதுக்கோட்டை,டிச.18: புதுக்கோட்டை மாவட்டத்தில் டிசம்பர் 2024ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.12.2024ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர்சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியதிட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.