வேதாரண்யம்,டிச.18: வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (18ம்தேததி) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வேதாரண்யம் நகரம், செம்போடை, தேத்தாகுடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு, பெரிய குத்தகை, தோப்புத்துறை, ஆதனூர் அண்டர்காடு, மறைஞாயஞாயநல்லூர், கோடியக்காடு, கோடியக்கரை, அகத்தியன்பள்ளி,நெய்விளக்கு, புஷ்கரணி, பூப்பட்டி, முதலியார்தோப்பு, கைலவனம்பேட்டை ஆகிய மின்பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
The post வேதாரண்யம் பகுதியில் இன்று மின்விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.