- அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் தின மாநாடு
- தர்மபுரி
- தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டமைப்பு
- ஓய்வூதியர் தினம் மற்றும்
- வெள்ளி விழா மாநாடு
- மாநில தலைவர்
- பாலகிருஷ்ணன்
- மாநில அமைப்பு
- கார்த்திகேயன்…
- தின மலர்
தர்மபுரி, டிச.18: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில், ஓய்வூதியர் தினம் மற்றும் வெள்ளி விழா மாநாடு நேற்று தர்மபுரியில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மாநில பொதுசெயலாளர் பத்மநாபன், மாநில பெருளாளர் குணசேகரன், பச்சியப்பன், ஜெயந்திரன், ராஜா, மூர்த்தி, தீர்த்தகிரி, பழனி, கணேசன், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாநாட்டில் அரசு ஊழியர்கள் போல், போக்குவரத்துக் கழக பணியாளர்களின் சம்பளம், பென்சன், ஓய்வுகால பணப்பலன்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய விதிகள் அனைத்தும், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். மாநில அரசின் சம்பள கமிஷன், அனைத்து பரிந்துரைகளையும், 15வது ஊதிய ஒப்பந்தத்தில் அமல்படுத்த வேண்டும். அனைத்து தனியார் மய நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
The post அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் தின மாநாடு appeared first on Dinakaran.