×

கமலா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு

தர்மபுரி, டிச.18: சீசன் காரணமாக, சிறிய ரக பெங்களூரு கமலா ஆரஞ்சு தர்மபுரிக்கு விற்பனைக்கு அதிக அளவில் வந்துள்ளது. இவை சாலையோர கடைகளில் கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ராயக்கோட்டை மார்க்கெட்டில் இருந்து தர்மபுரி சந்தைப்பேட்டை மார்க்கெட்டிற்கு தினமும் 5 டன் சிறிய ரக கமலா ஆரஞ்சு பழங்கள் விற்பனைக்கு வருகிறது. தர்மபுரி மார்க்கெட்டில், கடந்த மாதம் ஒரு கிலோ ₹100 வரை விற்பனையான இந்த சிறிய ரக கமலா ஆரஞ்சு, தற்போது சீசன் துவங்கி உள்ளதால் 10 முதல் 20 டன் அளவிற்கு வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கமலா ஆரஞ்சு ஒரு கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தைப்பேட்டை பகுதியில் மட்டுமின்றி சிறிய சரக்கு வேன்களில் வைத்து எஸ்.வி. ரோடு, ராமாக்காள் ஏரி, பழைய தர்மபுரி, பாரதிபுரம், நெசவாளர் நகர், செந்தில் நகர், கலெக்டர் அலுவலகம், ஒட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் கமலா ஆரஞ்சு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்ததால் கமலா ஆரஞ்சு பழத்தை நுகர்வோர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

The post கமலா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Bengaluru ,Karnataka ,Hosur ,Rayakottai ,Krishnagiri district… ,Dinakaran ,
× RELATED தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்