- கிறிஸ்துமஸ் விழா
- திருப்புத்தூர்
- மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி பள்ளி
- தென்கரை
- ஆயர்
- சாம்சன் ஜேக்கப்
- முதல்வர்
- ஜெய்சன் கீர்த்தி
- பள்ளிக் கல்விக் குழு
- தின மலர்
திருப்புத்தூர், டிச. 18: திருப்புத்தூர் அருகே தென்கரையில் உள்ள மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பாஸ்டர் சாம்ஸன் ஜேக்கப் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளி தாளாளர் ஜெய்சன் கீர்த்தி தலைமை வகித்தார். பள்ளி கல்விக்குழுமத் தலைவர் பிளாரன்ஸ் முன்னிலை வகித்தார்.
பள்ளி பொறுப்பாளர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஜான்சன் கின்ஸ்லி பங்கேற்றார். விழாவில், பரதநாட்டியம், பாடல்கள், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
The post கிறிஸ்துமஸ் விழா appeared first on Dinakaran.