- கேசி வீரமணி
- திருப்பத்தூர்
- 2021 சட்டமன்றத் தேர்தல்கள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- ஜோலார்பேட்டை
- திருப்பட்டூர் மாவட்டம்
திருப்பத்தூர்: கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுகவின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி போட்டியிட்டார். அப்போது, அவர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன், பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் வழக்கு தொடர்ந்தார். இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ பிரிவின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வீரமணி ஆஜராகாததால் விசாரணை டிசம்பர் 17க்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அவரது வக்கீல்களுடன் ஆஜரானார். பின்னர் விசாரணையை வரும் ஜன.6ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் மகாலட்சுமி உத்தரவிட்டார்.
The post பொய்யான பிரமாண பத்திரம் கோர்ட்டில் கே.சி.வீரமணி ஆஜர் appeared first on Dinakaran.