ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. ராணிப்பேட்டையில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிக்கும் ஆலை அமைகிறது. கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. கார் தொழிற்சாலைக்கு செப்டம்பர் 28-ம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. முதல் கட்டமாக 190 ஹெக்டேரில் ரூ.914 கோடியில் கார் தொழிற்சாலை அமைய உள்ளது.
The post ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம் appeared first on Dinakaran.