×

பந்தலூர் ரிச்மன்ட் பகுதியில் நெடுஞ்சாலையில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை


பந்தலூர்:பந்தலூர் ரிச்மன்ட் பகுதியில் நெடுஞ்சாலையில் ஆபத்தான மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலாவில் இருந்து பந்தலூர் செல்லும் நெடுஞ்சாலையில் பந்தலூர் ரிச்மன்ட் பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்கள் காய்ந்து எந்த நேரத்திலும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ள. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த சாலையானது சேரம்பாடி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கூடலூர், ஊட்டி பகுதிக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் தினம் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் சென்று வருகிறது. ஆபத்தான மரங்களால் மழை, காற்று வீசும்போது பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் ரிச்மன்ட் பகுதியில் நெடுஞ்சாலையில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Richmond ,Pandalur ,Nilgiris district ,Devala ,Dinakaran ,
× RELATED புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க...