×

மண்டபம்,உச்சிப்புளியில் மளிகை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

மண்டபம்,டிச.17: உச்சிப்புளி மற்றும் மண்டபம் பகுதிகளில் பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் புகையிலை உள்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மண்டபம் உச்சிப்புளி ஆகிய பகுதிகளில் மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் போதைப் பொருள்கள் மற்றும் புகையிலை உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் உச்சிப்புளி, மண்டபம் மற்றும் வேதாளை பகுதியில் காவல்துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இந்த பகுதிகளில் 3 பெட்டி கடைகளில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் 3 கடையின் உரிமையாளருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

The post மண்டபம்,உச்சிப்புளியில் மளிகை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Dinakaran ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்