- டெல்டா
- கூடைப்பந்து அணி மாவட்ட கூடைப்பந்து போட்டியில் முதலிடம்
- கும்பகோணம்
- டெல்டா கூடைப்பந்து கிளப்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம்
- தஞ்சாவூர்...
- டெல்டா கூடைப்பந்து அணி மாவட்ட கூடைப்பந்து போட்டியில் முதலிடம்
- தின மலர்
கும்பகோணம், டிச.17: தஞ்சாவூர் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று கும்பகோணம் டெல்டா கூடைப்பந்தாட்ட கழக அணியினர் முதலிடம் பிடித்தனர். தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 அணிகள் ஆண்கள் பிரிவிலும், 4 அணிகள் பெண்கள் பிரிவிலும் கலந்துகொண்ட இப்போட்டியில் கும்பகோணம் டெல்டா கூடைப்பந்தாட்ட கழக அணியினர் ஆண்கள் பிரிவில் பங்கேற்று விளையாடி முதல் பரிசை பெற்றனர். வெற்றிபெற்ற அணியினருக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து, கும்பகோணம் வந்த அணியினரை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவகுமார் மற்றும் பலர் பாராட்டி வாழ்த்தினர்.
The post மாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டி டெல்டா கூடைப்பந்தாட்ட அணி முதலிடம் appeared first on Dinakaran.