×

அறந்தாங்கியில் பரதநாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

 

அறந்தாங்கி,டிச.17: அறந்தாங்கி அருகே கீரமங்கலம் சிவன் கோவிலில் கிரிவல நிகழச்சியின் போது பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. கீரமங்கலம் மெய்நின்ற நாதர் சிவன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாள் கோவிலில் இருந்து கிரிவல நிகழ்ச்சி நடைபெறும். இந்த கிரிவல நிகழ்ச்சிக்கு முனதாக சிவன் கோவில் முன் மாணவிகள் பரதநாட்டியம் ஆடி வழிபாடு நடத்தினர்.

பரதநாட்டியம் ஆடி மாணவிகளுக்கு பரம்பரை அறங்காவலர் சக்கரவர்த்தி, சின்னராசா , கணேசன், வீரம்மாள் மகளிர் பாதுகாப்பு குழு பரிசு வழங்கி பாராட்டினர். இந்த கிரிவல ஊர்வலத்தில் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு மெய்நின்றநாதரை வழிபட்டு சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post அறந்தாங்கியில் பரதநாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Bharatanatyam ,Aranthangi ,Girivala ,Keeramangalam Shiva Temple ,Keeramangalam ,Meininnira ,Nathar ,Shiva Temple ,
× RELATED சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த சிறுமி