×

அமானி கொண்டலாம்பட்டியில் ₹2.65 லட்சம் கட்டுமான பொருட்கள் திருட்டு 2 வாலிபர்கள் கைது

சேலம், டிச.17: சேலம் அடுத்த பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (60). ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அமானி கொண்டலாம்பட்டி அடுத்த காட்டூர் பகுதியில், கடந்த 20 நாட்களாக கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக கட்டுமான பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, கடந்த 5ம் தேதி கட்டுமான பணி நடக்கும் இடத்தில் இருந்த ₹2.65 லட்சம் மதிப்பிலான இரும்பு கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கட்டுமான பொருட்களை திருடிச் சென்றது, மணியனூர் காத்தாம்மாள் நகரைச் சேர்ந்த குருபிரசாத் (20) மற்றும் வெங்கடேஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கட்டுமான பொருட்களை மீட்டனர்.

The post அமானி கொண்டலாம்பட்டியில் ₹2.65 லட்சம் கட்டுமான பொருட்கள் திருட்டு 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Amani Kondalambatti ,Salem ,Murugan ,Mariamman Koil Street, Panamarathupatti ,Kattur ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்