×

வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம், டிச.28: சேலம் சீலநாயக்கன்பட்டி தலைமலை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(எ) கொரில்லா செந்தில்(35). இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்பட பல வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில், வழிப்பறி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், நேற்று கொரில்லா செந்திலை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Senthilkumar (A) Gorilla Senthil ,Thalamalai Nagar, Seelanayakkanpatti, Salem ,Dinakaran ,
× RELATED சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு