சேலம், டிச.30: சேலம் மாவட்டம், குப்பனூரை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச்சாவடி அருகே, நேற்று காலை, கார் ஒன்று கேட்பாரற்று சாலையோரம் நின்றிருந்தது. அவ்வழியாக ரோந்து சென்ற வீராணம் போலீசாரிடம், அப்பகுதி மக்கள், கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் காரில் சோதனையிட்ட போது, சாவியுடன் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. காரின் நம்பர் பிளேட் எண்ணை வைத்து விசாரித்தபோது, திருச்செங்கோடு அருகே மொளசியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதுபற்றி திருச்செங்கோடு போலீசில் விசாரித்த போது, பாலசுப்பிரமணியனின் கார் நேற்று முன்தினம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருச்செங்கோடு போலீசார், உரிமையாளர் பாலசுப்பிரமணியனுடன் வந்து காரை எடுத்துச்சென்றனர். தொடர்ந்து காரை திருடி வந்து அங்கு நிறுத்திச்சென்ற நபர் குறித்து, வீராணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள் appeared first on Dinakaran.