×

1,715 ரேஷன் கடைகள் மூலம் 10.71லட்சம் கார்டுகளுக்கு: பொங்கல் பரிசு தொகுப்பு

சேலம், டிச.30: சேலம் மாவட்டத்தில் 1,715 ரேஷன் கடைகள் மூலம் 10.71 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ெபாங்கலையொட்டி, அரிசி கார்டுதார்ரகளுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் 1715 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்குகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் 1,715 ரேஷன் கடைகள் மூலம் 10.71 லட்சம் அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம், ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வீடு தோறும் ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்குகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை ஆகியவை ரேஷன் கடைக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்க உள்ளது. கரும்பு கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது,’ என்றனர்.

The post 1,715 ரேஷன் கடைகள் மூலம் 10.71லட்சம் கார்டுகளுக்கு: பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,festival ,Pongal ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்