×

மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

தேனி, டிச.17: தேனி மாவட்ட கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினரான கருப்பையா தலைமையில் மாற்றுத் திறனாளிகள் வந்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

இம்மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் 28 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவின் பாலகம் வைப்பதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

The post மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Collector ,Collector ,Shajeevana ,Karuppiah ,Dinakaran ,
× RELATED தேனியில் முல்லையாற்று வெள்ளத்தில்...