×

கொடைக்கானலில் ேலாக் அதாலத் ரூ.19.41 லட்சம் தீர்வு தொகை வழங்கல்

கொடைக்கானல், டிச. 17: கொடைக்கானல் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், கொடைக்கானல் நீதிபதியுமான செல்வம் தலைமை வகித்தார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் கொடைக்கானல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், சிவில் வழக்குகள், கிரிமினல் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 127 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதில் இழப்பீட்டு தொகையாக மொத்தம் ரூ.19 லட்சத்து 41 ஆயிரம் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்குதாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post கொடைக்கானலில் ேலாக் அதாலத் ரூ.19.41 லட்சம் தீர்வு தொகை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Lok Adalat ,Kodaikanal ,National People's Court ,Lok ,Adalat ,District Legal Services Committee ,Kodaikanal National Legal Services Commission ,State Legal Services Commission ,District Legal Services Commission ,Dinakaran ,
× RELATED மேலூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் வாயிலாக 352 வழக்குகளுக்கு தீர்வு