×

திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருப்பூர், டிச.17: திருப்பூர் திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பால்ராஜ், பொறியாளர் நக்கீரன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கி தீர்மானம் வாசிக்கத் தொடங்கியதும் திமுக கவுன்சிலர்கள் 8 பேர் நகராட்சி தலைவர் முறையாக நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வரி உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி கூட்ட அரங்கிலிருந்து மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் வரி உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களும் வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பாஜவில் இணைந்த பெண் கவுன்சிலர் பார்வதியை அவமரியாதை செய்வதாக கூறி பாஜவினர் நகர்மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மன்றக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

The post திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur Thirumuruganpoondi Municipal Council ,Tiruppur ,Municipal Chairman Kumar ,Municipal Commissioner ,Balraj ,Engineer ,Nakkheeran ,DMK ,
× RELATED காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண்: வீடியோ வைரல்