×

அரசு பள்ளியில் மர்ம நபர்கள் அட்டகாசம்

உடுமலை, ஜன.5: உடுமலை அருகே உள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இரவு நேரத்தில் பின்புறமாக நுழைந்து பள்ளியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க், விளையாட்டு உபகரணங்கள், வகுப்பு அறையில் உள்ள ஜன்னல்கள், டியூப் லைட், நூற்றாண்டு நினைவு அரங்கத்தின் மேற்கூரைகளை மர்ம நபர்கள் உடைத்து மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பிடத்தில் உள்ள பைப் லைன்கள் என பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்‌. அரசுக்கு சொந்தமான பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய நபர்கள் குறித்து பெற்றோர் சங்க தலைவர் தலைமையில், தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் கணியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரசு பள்ளியில் மர்ம நபர்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Karathozhuvu Government Higher Secondary School ,Syntex ,Dinakaran ,
× RELATED பயோ மைனிங் முறையில் குப்பைகள் மறுசுழற்சி பணி தீவிரம்