×

புதுக்கோட்டை நகரில் உள்ள மகா வராஹி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபாடு

புதுக்கோட்டை, டிச.16: புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில்  மகா வராஹி அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த தெற்கு நான்காம் வீதி மார்க்கெட் தெருவில் உள்ள  ஆஞ்சநேயர் திருக்கோயிலில்  மகா வராஹி அம்பிகை முதலாம் ஆண்டு வருஷ அபிஷேக வைபவ முளைப்பாரி எடுக்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் காலையில் விநாயகர் பூஜையுடன் தொடங்கி கலச ஆவாஹானம் வேதபராயணம் வைபவம் மணி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். முளைப்பாரி  ஆஞ்சநேயர் திருக்கோயில் அன்னதான மண்டபத்தில் இருந்து தெற்கு நான்காம் வீதி, மேல ராஜவீதி, வடக்குராஜவீதி, கீழராஜவீதி அண்ணா சிலை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தனர். பெண்கள் திரளாக கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர். பின்னர் ஆலயத்தில்  மகா வராஹி அம்பிகைக்கு சிறப்பு மஹா தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் வருகை தந்து  மகாவராஹிஅம்மனை வழிபட்டுச் சென்றனர். அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டை நகரில் உள்ள மகா வராஹி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Goddess ,Maha Varahi ,Pudukkottai ,Pudukkottai Hanuman Church ,Anjaneyar Temple ,Market Street ,South Fourth Street ,Hindu Religious and Charitable Trust ,Pudukkottai… ,
× RELATED புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகே...