×

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கருமேனியாறு- நம்பியாறு கால்வாய்க்கு வெள்ள நீர் திறப்பு

கேடிசிநகர்,டிச.16: நாங்குநேரி தாலுகா காரியாண்டியில் இருந்து தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்புத்திட்ட வெள்ளநீர் கால்வாயில் கருமேனியாற்றில் அமைந்துள்ள திருப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை எம்பி., ராபர்ட் புருஸ், சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, முன்னாள் திசையன்விளை நகராட்சி சேர்மன் சேம்பர் செல்வராஜ், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் பெல், பாளை வட்டார காங்கிரஸ் வட்டார தலைவர் டியூக் துரைராஜ், நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் காமராஜ், ராமஜெயம், நாங்குநேரி நகர தலைவர் சுடலை கண்ணு, மூத்த காங்கிரஸ் தலைவர் லெனின் பாரதி, மூலைக்கரைப்பட்டி முத்துகிருஷ்ணன், மாவட்ட முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு, மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கருமேனியாறு- நம்பியாறு கால்வாய்க்கு வெள்ள நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thamirabarani river ,Karumeniaru-Nambiar ,Kdc Nagar ,Thiruppu Dam ,Karumeniaru ,Thamirabarani-Karumeniaru-Nambiar river ,Kariyandi ,Nanguneri taluka ,Nellai MP ,Robert Bruce ,Karumeniaru-Nambiar canal ,Dinakaran ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்