×

மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி

 

சிவகங்கை, டிச. 16: கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25வது ஆண்டு நிறைவடைந்த நிலையில் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் திருஞானசம்பந்தம் தலைமையில் டிசம்பர் 23 முதல் 31ம் தேதி வரை திருக்குறள் குறித்த கருத்தரங்குகள், மாணவர்களுக்கான திருக்குறள் வினாடி- வினா போட்டி, பேச்சுப் போட்டி, திருவள்ளுவரின் உருவ படம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட மைய நூலகர்கள் முத்துக்குமார், கனகராஜ், நூலக வாசகர் வட்ட தலைவர் டி.என்.அன்புத்துரை, எழுத்தாளர் ஈஸ்வரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,Sivaganga ,Thiruvalluvar ,Kanyakumari ,Kaviyogi Sudthananda Bharathi District Central Library ,District Library Officer ,Thirugnanasampandham… ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு திருக்குறள் போட்டி