- இந்து மதம்
- முன்னணி
- Kulachal
- தண்டக்காடு பகவதியம்மன் கோயில்
- கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி
- இந்து முன்னணி
குளச்சல்,டிச.16: மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயிலில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை அகற்றவேண்டும். கோயிலை தினம் சுத்தம் செய்து அம்மன் புனிதத்தை காக்க வழி செய்திட வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோயில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார்.
கோட்ட செயலாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர்கள் ராஜா, பினில், ஒன்றிய தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் ரவீந்திரன், துணைத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் கண்ணன், கிள்ளியூர் ஒன்றியத் தலைவர் ஆனந்த், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்தினர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.