- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- உதவித் தனிச் செயலாளர்
- ரங்கசாமி
- தமிழறிமா
- 6வது குறுக்குத் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், மூலக்குளம், புதுச்சேரி.…
- முதலமைச்சரின் உதவித் தனிச் செயலாளர்
புதுச்சேரி, டிச. 16: புதுச்சேரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதல்வர் ரங்கசாமியின் உதவி தனிச்செயலர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரிமா(34). இவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் உதவி தனி செயலராக பணியாற்றி வந்தார். கடந்த 9ம் தேதி இரவு சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் காலாப்பட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், வேலை முடிந்து சின்ன காலாப்பட்டு இசிஆர் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இத்தகவல் அறிந்தவுடன் முதல்வர் ரங்கசாமியும் மருத்துவமனைக்கு சென்று தமிழரிமாவை பார்த்தார்.
மேலும், அவருக்கு உரிய சிகிக்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். இதுகுறித்து தமிழரிமா மனைவி சுபாஷினி கொடுத்த புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 நாட்களாக தமிழரிமாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு பவழக்காரஞ்சாவடி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.
The post சாலை விபத்தில் படுகாயமடைந்த புதுவை முதல்வரின் உதவி தனி செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Dinakaran.