×

ஒட்டன்சத்திரம் மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கல்

ஒட்டன்சத்திரம், டிச.16: வடகாடு ஊராட்சி கோட்டைவெளி பகுதி மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட வடகாடு ஊராட்சி கோட்டைவெளி பகுதியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆலோசனையின் பேரில், தற்பொழுது பெய்துவரும் கனமழையால் வாழ்வாதரமின்றி இருக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல் முருகன், காமராஜ், ஒன்றிய துணைச்செயலாளர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, ,துணை தலைவர் பிரபாவதி, ஊராட்சி செயலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Ottanchathram hill ,Ottanchathram ,Vadakadu Panchayat Kottaveli ,Minister ,Ar. Chakrabarni ,Dindigul district ,Dinakaran ,
× RELATED சுற்றுப்புற சூழல் தின விழிப்புணர்வு