வடமதுரை, டிச.16: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தனியார் ஆயில்மில்லில் சக ஊழியர்களின் பணத்தை திருடிய வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டியில் தனியாருக்குச் சொந்தமான ஆயில் மில் உள்ளது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு ரேகன்(35) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே ஆலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் வடமாநில நபர் ஒருவர் அங்குள்ள குடோனில் இருந்து திடீரென தப்பியோடி உள்ளார்.
அவரை ரேகன் மற்றும் உடன் இருந்த பணியாளர்கள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாபூர் பகுதியைச் சேர்ந்த வகில் (45) என்பதும், ஆலையில் வேலை பார்க்கும் பணியாளர்களின் உடைமைகளில் இருந்த ரொக்க பணம் ரூ. 6 ஆயிரத்தை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து பிடிபட்ட அந்த வாலிபரை, வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, வகிலை கைது செய்தனர்.
The post வடமதுரை அருகே ஊழியர்களின் பணம் திருட்டு: வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.