×

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி வெளியேற வலியுறுத்தி போஸ்டர்

வத்தலக்குண்டு: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி வெளியேறும்படி கூறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் உள்ள பஸ்நிலையம், காளியம்மன் கோயில் உள்பட பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதில், ‘வெளியேறு… வெளியேறு… எடப்பாடியே வெளியேறு… பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வெளியேறு…’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டரில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. அதிமுக பொதுக்குழு சென்னையில் நேற்று நடந்த நிலையில் இந்த போஸ்டர்களை வத்தலக்குண்டு அருகே தேவரப்பன்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர்ஒட்டியுள்ளார். இதனால் வத்தலக்குண்டு பகுதி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி வெளியேற வலியுறுத்தி போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,General Secretary ,Vattalakundu ,General ,O. Panneerselvam ,AIADMK Rights Recovery Group ,Kaliamman ,Vattalakundu, Dindigul district… ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு