×

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்: மாயாவதி ஆதரவு

புதுடெல்லி: உபி முன்னாள் முதல்வரும் பிஎஸ்பி தலைவருமான மாயாவதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிஎஸ்பி ஆதரவளிக்கிறது. இது செலவுகளைக் குறைக்கும், மக்கள் நலப் பணிகள் தடையின்றி தொடரும் என்பதால் மற்ற கட்சிகளும் இந்த நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.தலித், பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும். ஒன்பதாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒன்றிய,மாநில சட்டங்களுக்கு நீதித்துறை மறுஆய்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் அரசியல் சாசனம் தொடர்பான விவாதத்தின் போது, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் தலித்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்களை கவரும் விதத்தில் சில அடிப்படையற்ற விஷயங்களை கூறின. இதில், ஒரு துளி கூட உண்மை இல்லை.காங்கிரஸ் ஆட்சியின் போது தலித்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.அப்போது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மசோதாவுக்கு சமாஜ்வாடி எதிர்ப்பு தெரிவித்தது. மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. சாதிய அரசியலால் நாடு தோல்வியடைந்துள்ளது’’ என்றார்.

The post ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்: மாயாவதி ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Mayawati ,New Delhi ,Ubi ,BSP ,Dinakaran ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு