×

பாஜவின் அதிகார அத்துமீறல் அரசியல் கருவியாகும் அமலாக்கத்துறை: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மோடியின் ஒன்றிய அரசு அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை அரசியல் கருவிகளாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டவும், உடைக்கவும் பயன்படுத்தி வருகிறது. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் அதானியிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை, அவரது நிறுவனங்களில் எதிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, அவரை கைது செய்யவும் முன்வரவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மூலம் மூத்த அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

The post பாஜவின் அதிகார அத்துமீறல் அரசியல் கருவியாகும் அமலாக்கத்துறை: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Bahja ,Muttarasan ,Chennai ,Communist Party of India ,Secretary of State ,Mutharasan ,Modi ,Union Government ,Adani ,Enforcement Department ,Dinakaran ,Bajaj ,
× RELATED சோதனையில் ஏதும் இல்லை என கூறியது ED: அமைச்சர் துரைமுருகன் பேட்டி