×

விஜய் புரியாமல் பேசுகிறார்: சரத்குமார் பேட்டி

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள மஹாலில் நேற்று பாஜ சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் முப்பெரும் விழா நடந்தது. விழாவில், நடிகரும், பாஜவை சேர்ந்த சரத்குமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் வந்து அரசியல் வந்ததற்கு வரவேற்கிறேன். மும்மொழி கொள்கை மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பதாக கூறினார். தற்போது மணிப்பூர் பற்றி சொல்கிறார். இன கலவர பிரச்னையை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது.

அதனை வந்து குற்றச்சாட்டாக விஜய் பேசுவது, புரியாமல் பேசுகிறார். எதையுமே புரிந்து விஜய் பேச வேண்டும். விழாவில் கூட்டம் வரும் என போலீசாருக்கு தெரியும். கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததற்கு, அல்லு அர்ஜூன் எப்படி பொறுப்பேற்ப்பார். அவரை கைது செய்தது எவ்வித நியாயமும் கிடையாது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post விஜய் புரியாமல் பேசுகிறார்: சரத்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Sarathkumar ,Vaniyambadi ,BJP ,Christmas ,Mahal ,Vaniyambadi, Tirupattur district ,
× RELATED விஜய் திவாஸ் தினம்: வெற்றிப் போர்...