×

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்: டிடிவி தினகரன் புகழாரம்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். அவரது மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த .ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்: டிடிவி தினகரன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : EVKS ILANGOWAN ,DTV DINAKARAN ,Chennai ,Congress ,Erode East ,L. A. Vuma ,E. V. K. S. Ilangovan ,AMUGA ,GENERAL SECRETARY ,Senior Leader ,Congress Party ,Evks Ilangovan ,DTV ,Dinakaran ,
× RELATED ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் இறுதி அஞ்சலி