×

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு – செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, தமிழிசை இரங்கல்

சென்னை :காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் மறைவிற்கு செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, தமிழிசை ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை : ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு.ஈவிகேஸ் இளங்கோவனை காங்கிரஸ் கட்சியினர் தன்மானத் தலைவர் என்று வாஞ்சையோடு அழைப்பார்கள். ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி :ஈவிகேஎஸ் இளங்கோவன் அச்சமின்றி மனதில் பட்டதை பேசக் கூடியவர்.தனது மனதுக்கு படும் கருத்தை அழுத்தமாக உறுதியாக சொல்லக் கூடியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

The post ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு – செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, தமிழிசை இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Congress ,Senior Leader ,Erode East Constituency ,L. A. Vuma ,E. V. K. S. Richie ,Jyothimani ,Tamil ,Nadu ,Ilangovan ,Congress Committee ,Riches ,EVKS ,Congress Party ,
× RELATED தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத...