திருவாரூர், டிச. 13: கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட கோரி வரும் 17ம் தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில பொதுசெயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவையில் நடைபெற்ற தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாநிலம் முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது வருமானத்தில் பெரும் அளவு வாடகைக்கு செலவிட்டு பொருளாதார நெடுக்கடிக்கு ஆளாகி வருவதால் கிராமபுறத்தில் வீட்டுமனை இல்லா குடும்பங்களுக்கு வீட்டுமனையும், மறைந்த முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது செயல்படுத்திய விவசாய தொழிலாளர் நலவாரியத்தினை மீண்டும் செயல்படுத்திட வேண்டும்,
நீர்நிலை புறம்போக்குகளில் இருந்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் வீடும், கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டாவும் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ந் தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கபபடவுள்ளதால் இதில் விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
The post குடிமனை பட்டா கேட்டு 17ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.