அருப்புக்கோட்டை, டிச.13: அருப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு சூப்பர்வைசர் முத்துக்குமார், விற்பனையாளர்கள் மகாலிங்கம், பாண்டி ஆகியோர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
நேற்று மதியம் 12 மணியளவில் கடையை திறப்பதற்காக சூப்பர்வைசர் முத்துக்குமார், விற்பனையாளர்கள் அழகு, மலைச்சாமி ஆகியோர் வந்தனர். அப்போது கடையின் கிரில் கேட் ஷட்டரில் இருந்த மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பாட்டில்கள் ஏதும் திருடு போகவில்லை. இதுகுறித்து சூப்பர்வைசர் முத்துக்குமார் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அருப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.