×

ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில் மூடப்படாத கழிவு நீர் கால்வாய்; பயணிகளுக்கு விபத்து அபாயம்

 

ஊட்டி, டிச. 13: ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில் நடைபாதையில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளதால் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகரின் முக்கிய பகுதியாக சேரிங்கிராஸ் உள்ளது. இந்த சாலையோரங்களில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் கால்வாய் மீது கான்கிரீட் போடப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதையில் பல இடங்களிலும் கழிவு நீர் கால்வாய்கள் குறுக்கே செல்கின்றன.

இந்த கழிவு நீர் கால்வாய்கள் செல்லும் இடங்களில் இரும்பு கம்பிகள் கொண்டு மூடி அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவைகள் முறையாக அமைக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக, எஸ்எம் மருத்துவனை அருகேயுள்ள நடைபாதையில் கழிவு நீர் கால்வாய் முறையாக மூடப்படாமல் உள்ளது. இந்த நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் செல்லும் பலரும் தவறி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கால்நடைகளும் தவறி கால்வாய்க்குள் விழ வாய்ப்புள்ளது. எனவே, சேரிங்கிராஸ் முதல் ஆர்டிஓ அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையோர நடைபாதைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை முறையாக மூட தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

The post ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில் மூடப்படாத கழிவு நீர் கால்வாய்; பயணிகளுக்கு விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty Serengras ,Ooty ,Ooty Serangras ,Serengras ,Dinakaran ,
× RELATED அகலம் குறைத்து அமைக்கப்பட்டதால்...