×

வரும் 16ம் தேதி கூடலூர், பந்தலூர், தாளூரில் மின் தடை

 

ஊட்டி, டிச. 13: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 16ம் தேதி கூடலூர், பந்தலூர் மற்றும் தாளூரில் மின் விநியோகம் இருக்காது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் கூறியிருப்பதாவது: உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களில் வரும் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதன்படி உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திகுன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் பிரேர், நம்பர் 3 டிவிஷன் ஆகிய பகுதிகள்.

சேரம்பாடி துணை மின் நிலையம்: சேரம்பாடி, கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுன்னி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி ஆகிய பகுதிகள். கூடலூர் துணை மின் நிலையம்: கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீ மதுரை, மண் வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கார்குடி மற்றும் தேவர்சோலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

The post வரும் 16ம் தேதி கூடலூர், பந்தலூர், தாளூரில் மின் தடை appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Pandalur ,Thalur ,Sekar ,Uppatti ,Cherambadi ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே சுற்றித்திரிந்து வரும்...