×

குளச்சல் அருகே சுயஉதவிக்குழு கடன் பிரச்னையில் மோதல் 6 பேர் மீது வழக்கு

குளச்சல், டிச.13: குளச்சல் குழந்தை இயேசு காலனியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். அவரது மனைவி சகாய ரெஜி (49). இவர் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ₹45 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக சகாய ரெஜி கடனுக்கான தொகையை கட்டவில்லை என தெரிகிறது. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (45), ரெஜிசா, செல்வம் ஆகியோர் சகாய ரெஜி வீட்டுக்கு சென்று கடனுக்கான பணத்தை கட்டுமாறு கூறினர். அப்போது சகாய ரெஜிக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் படுகாயம் அடைந்த சகாய ரெஜி குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சகாய ரெஜி மற்றும் சுகன்யா ஆகியோர் தனித்தனியே குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளச்சல் அருகே சுயஉதவிக்குழு கடன் பிரச்னையில் மோதல் 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Alexander ,Baby Jesus Colony, ,Sakaya Reji ,Women's Self Help Committee ,Sakaya Regi ,Dinakaran ,
× RELATED குளச்சலில் மதுபோதையில் இயக்கிய 6 வாகனங்கள் பறிமுதல்