×

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தத்தில் கால்நடை மருத்துவ முகாம்

 

பொன்னமராவதி, டிச. 28: பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் கால்நடைகளுக்கானமருத்துவமுகாம் நடந்தது. கால்நடைபராமரிப்புத்துறைமண்டல இணைஇயக்குநர் சோமசுந்தரம் அறிவுரையின் படி, இலுப்பூர் உதவி இயக்குனர் முருகன் மேற்பார்வையில் புதுக்கோட்டைகால்நடைநோய் புலனாய்வுபிரிவு உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமையில் கண்டியாநத்தம் கிராமத்தில் கால்நடைகளுக்கானகோமாரிநோய் தடுப்பூசிமுகாம் நடைபெற்றது. முகாமினைஊராட்சித்தலைவர் செல்விதொடங்கிவைத்தார்.

கால்நடைநோய் புலனாய்வுபிரிவுமருத்துவர் ராஜேஸ்வரிகால்நடைகளுக்குரத்தமாதிரிசேகரித்தார். ஆலவயல் கால்நடைஉதவிமருத்துவர் ராஜசேகர் ,கால்நடைஆய்வாளர் செபஸ்டியம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சாந்தி ஆகியோரைக் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டனர். இதில் கண்டியாநத்தம் மற்றும் சுற்றுப் பகுதிகால்நடைகள் பங்குபெற்றன.

The post பொன்னமராவதி அருகே கண்டியாநத்தத்தில் கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kandiyanatham ,Ponnamaravathi ,Somasundaram ,Animal Husbandry Department ,Ilupur ,Murugan ,Assistant Director ,Pudukkottai Cattle Disease Investigation Division ,Anandan ,
× RELATED பொன்னமராவதியில் தராசுகளுக்கான முத்திரையிடும் பணி